குழுவாக விளையாடப்படும் விளையாட்டுகளில் எல்லோரும் பிடித்தமான விளையாட்டு இதுவாகும். நண்பர்களுடன் மட்டுமின்றி, இந்த விளையாட்டினை குடும்பத்தினருடனும் விளையாடிய அனுபவம் பலருக்கும் உண்டு. பெரும்பாலும் உறவினர்கள் வீட்டிற்கு வரும் நாட்களில், இரவு நேரங்களில் மொட்டை மாடியிலும், தெருக்களிலும் இந்த விளையாட்டை விளையாடுவது சுகம்.
தேவையான பொருட்கள்
கைக்குட்டை
அல்லது சிறிய துண்டு
தேவையான நபர்கள்
இது
ஒரு குழு விளையாட்டு. எனவே குறைந்தபட்சம் 8 பேர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும்
விளையாடலாம். அதிகபேர் விளையாடினால் தான் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
விளையாடும் முறை
முதலில்
அனைவரும் வட்ட வடிவில் அமர வேண்டும். அதில் யாரேனும் ஒருவர் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அந்த நபர், ஒரு கையில் கைக்குட்டையை எடுத்து, தலைக்கு மேல் உயர்த்தி கையை சுழற்றியவாறே,
வட்டமாக அமர்ந்திருக்கும் அனைவரையும் வட்டத்திற்கு வெளியே சுற்றி வருவர். அவ்வாறு சுற்றி
வரும் போது, சுற்றிவருபவர் உரக்க பாடல் பாடுவர். சுற்றி வருபவர் ஒரு வரி பாட, வட்டத்தில்
அமர்ந்திருப்பவர்கள் அடுத்தவரியை உரக்க பாடுவர்.
சுற்றிவருபவர்
: கொல கொலயா முந்திரிக்கா…..
அமர்ந்திருப்பவர்கள்
: நரிய நரிய சுத்தி வா….
சுற்றிவருபவர்
: கொல்லை அடிச்சவன் எங்கிருக்கான்….
அமர்ந்திருப்பவர்கள்
: கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி….
இவ்வாறு
பாடிக்கொண்டே ஒருமுறையோ, இருமுறையோ வட்டத்தை சுற்றி சுற்றி வருவர். பாடல் முடிந்ததும்
அமர்ந்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர்மேல் தான் கையில் சுற்றிக் கொண்டிருக்கும் கைக்குட்டையை
போட்டுவிட்டு வட்டத்தை சுற்றி ஓடுவர்.
பின்னர்
அந்த நபர் எழுந்து, கையில் கைக்குட்டையை பிடித்தவாறு, தன் மேல் கைக்குட்டையை போட்ட
அந்த நபரை துரத்தி பிடிக்க வேண்டும். அவ்வாறு துரத்தி பிடித்துவிட்டால் அவரே வெற்றி பெற்றவராவார். எனவே அவர் தன்னுடைய பழைய இடத்தில் அமர்ந்துக் கொள்ளலாம். மாறாக, துரத்தி
பிடிப்பதற்குள், ஓடும் நபர் வட்டத்தை சுற்றி வந்து, வட்டத்தில் காலியாக உள்ள இடத்தில்
உட்கார்ந்து கொண்டால், இவர் வெற்றிபெற்றதாக அர்த்தம். எனவே, துரத்தி வரும் நபர் மீண்டும்
ஆட்டத்தை தொடர வேண்டும்.
அவரும்
அதேபோல் பாடல் பாடி வலம் வந்து யார் மேலாவது கைக்குட்டையை போட வேண்டும். இவ்வாறு
ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
விளையாட்டின் நன்மைகள்
·
குழந்தைகளுக்கு
குழுவாக விளையாடும் திறன் வளரும்.
·
ஓடி
விளையாடுவது உடலுக்கு நல்லது.
·
பாட்டு
பாடி மகிழ்வர்.

சூப்பர்
ReplyDelete